நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

நார்த்தங்காய் கோடைகாலங்களில் அதிகமாக கிசைக்கிறது. இதை எலுமிச்சை போல் சாறுபிழிந்து பானமாக அருந்தலாம். ஊறுகாய் செய்து சாப்பிட இதன் பலனை  முழுவதுமாக பெறலாம்.

நாரத்தங்காயால் வாதநோயும், குன்மமும், வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும். பசியுண்டாகும். இதன் புளிப்பினால் தேகம் சுத்தியாகும்.
 
நாரத்தங்காய் இரத்தத்தி சுத்தம் செய்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மருந்து உண்ணும் காலங்களில் பத்தியத்திற்கு உதவும். கோடைகாலங்களில் ஏற்படும்  சோர்வை போக்கி புத்துணர்வு அளிக்கும்.
 
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். பித்த அதிகரிப்பால்  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். 
 
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன்  பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். 
 
ரத்தம் மாசடையும் போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை  தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும்.
 
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் சிறிது தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம்  எளிதில் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்