தினசரி 2 அத்திப்பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அத்திப்பழத்தில் உடல் நலத்திற்கு தேவையான பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும்,  வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய இருக்கிறது. அத்திப்பழங்கள் ஊதா, மஞ்சள், கருப்பு, ப்ரெளன் போன்ற நிறங்களில் வெவ்வேறு அளவுகளில்  கிடைக்கின்றன.
அத்திப்பழங்கள் சுருக்கங்கள் நிறைந்த தோல்களை கொண்டவை.இவை விரைவாக அழுகும் தன்மை உள்ளதால் பெரும்பாலும் இவை நமக்கு காய்ந்த  வடிவத்திலே கிடைக்கிறது.காய்ந்த அத்திப்பழத்தில் அதிக நன்மைகள் இருக்கின்றது.இது மிகவும் சுவை நிறைந்ததாகவும் உள்ளது.அத்திப்பழத்தை தினமும்  சாப்பிட்டால் நாம் உடல்நலமுடன் வாழமுடியும்.
 
அத்திப்பழத்தில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளது.இதை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள் சரியாகி மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கிறது.
 
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைய உள்ள பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை  வேகமாக குறையும்.
 
தொடர்ந்து அத்திப்பழம் உட்கொண்டால் கொழுப்பு குறையும். அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்பை  வெளியேற்றுகிறது. அத்திப்பழங்களை பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை  அதிகரிக்கவும் செய்கிறது.
 
குடலைச் சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்றுநோயை அத்திப்பழம் தடுக்கிறது. அத்திப்பழங்களை பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.
அத்திப்பழ மரத்தின் இலைகளிலும் நார்ச்சத்து உள்ளது இலைகளை சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பதை சீராக வைத்து கொள்ள முடியும். மேலும் வேகமாக ஜீரணம் ஆகிறது. இது மூல நோய் வராமல் தடுக்க வழி செய்கிறது.
 
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்