வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.
 
									
				
	வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. கை, கால் எரிச்சலுக்கு  வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம். 
 
									
				
	 
	வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை  நீங்கும்.