ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளை அள்ளித்தரும் அதிமதுரம் !!

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது.

அதிமதுரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர குடலில் உள்ள புண்கள் சரியாகும். மேலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வரும் அல்சர் புண்களும் எளிதில் குணமடையும்.
 
மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும். 
 
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.
 
அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமதுரத்தை ஊறவைத்தும்  எடுத்துக்கொள்ளலாம். 
 
ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.
 
அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும்  சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்