திரிபலா பொடியின் அற்புத பயன்கள் !!

திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப்பொருள். கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. 

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். திரிபலா பொடி நுரையீரல் பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
 
திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தும். சைனஸ் பிரச்சினையையும் போக்கும்.
 
இந்த சூரணம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும். ரத்தசோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வந்தால் போதும். 
 
திரிபலாவிற்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் தன்மை இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்