கற்றாழை ஜெல்லை இவ்வாறு பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்...!!

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள் வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடல் சத்து கூடும். தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
 
சோற்றுக்கற்றாழை, வெள்ளைப்பூண்டு, பனங்கற்கண்டு, எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தோராயமான அளவுகளில் காய்ச்சி வடித்த  எண்ணெய் குடல், வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.
 
சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த என்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
 
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது தற்றாழைச்  சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைபயன்படுத்தலாம்.
 
கேசப் பராமரிப்பில் தலைக்கு கருப்பிடவும் கேசத்தின்வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும்  பொடுகை நீக்குகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்