டாஸ்மாக் கடை முன்பு நின்ற இளம் பெண்கள்... பிரபல இயக்குநர் விமர்சனம் !

வியாழன், 7 மே 2020 (17:25 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாநிலங்களில் ( கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா  ) போன்ற மாநிலங்களில்  மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  அதனால் இரண்டு மாதங்களாகக் காத்துக் கிடந்த மதுபானப் பிரியர்கள் ஏராளமாய்க் குவிந்தனர்.

இதில்,  பெங்களூரில் உள்ள ஒரு மதுபானக் கடையின் முன்பு, பல இளம் பெண்கள் மதுவாங்க வரிசையில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து, இயக்குநர்  ராம் கோபால் வர்மா தனது  டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, 'மதுபானக் கடைக்கு பெண் யார் நிற்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.. இன்னும் குடிமகன்களிடம் இருந்து பெண்களைக் பாதுக்காக்குமாறு பேசுகிறோம் 'என தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்