தனக்கு கொரோனா என சொல்லி ஆம்புலன்ஸில் தப்பித்த பெண்… கணவர் குடும்பத்தினரின் இந்த செயல்தான் காரணமா?

சனி, 26 செப்டம்பர் 2020 (12:26 IST)
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்குக் கொரோனா இருப்பதாக சொல்லி வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பெங்களூருவின் மஹானாகரா என்ற பகுதியில் வசிக்கும் பெண் இந்த மாதம் 4 ஆம் தேதி கொரோனா இருப்பதாக சொல்லி ஆம்புலன்ஸில் இருவர் அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு அந்த பெண்ணின் கணவரின் அண்ணன் தொலைபேசி செய்து விசாரித்த போது, அப்படி யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என சொல்லியுள்ளனர்.

இதையடுத்து போலிஸில் புகார் அளித்து, பத்திரிக்கையிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த அந்த பெண் போலீஸாருக்கு அழைத்து ‘நான் காணாமல் போகவில்லை, என் கணவர் மற்றும் அவரின் அண்ணன் இருவரும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நான் கொரோனா நாடகமாடி தப்பித்து வந்தேன்’ எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட போலிஸார் அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் கணவர் மற்றும் அவர் அண்ணன் மேல் புகார் கொடுக்க மறுத்ததால் வழக்குப் பதிவு செய்யாமல் போலிஸார் விட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்