இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவு வகை எது? ஆய்வில் தகவல்

Sinoj

வெள்ளி, 1 மார்ச் 2024 (14:37 IST)
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் எந்த வகையான உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்திய மக்கள் தொகையில் 96.69 கோடி பேர் (71.1சதவீதம் பேர் தங்கள் அன்றாட உணவில் மீன்களை சேர்த்துக் கொள்வதாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்கள் தங்கள் தினசரி உணவில் மீன் சேர்த்துக் கொள்வதில், மாநில வாரியாக கேரளம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 53.4 சதவீதம் மக்கள் உண்கிறார்கள் என்று, கோவாவில் 36.2 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலத்தில் 21.9 சதவீதமும்,  அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
 
அதிலும், பெண்களைக் (65.6 சதவீதம்) காட்டிலும், ஆண்கள் (78.6சதவீதம்) மீன் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்