நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக தூங்குகிறார்கள்! ஆய்வு முடிவு!

திங்கள், 5 அக்டோபர் 2020 (17:04 IST)
இந்தியாவில் நகர்ப்புறத்தை விட கிராம மக்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவில் மக்கள் ஒருநாளின் 24 மணிநேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்ப்ற மக்கள் அதிக நேரம் தூங்குவதற்கு செலவு செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தோராயமாக 554 நிமிடங்கள் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். பெண்களின் தூங்கும் நேரம் 557 நிமிடங்களாக உள்ளது.. இதே போல நகரங்களில் ஆண்கள் 534 நிமிடங்களும், பெண்கள் 552 நிமிடங்களும் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்