நிதீஷ்குமாரை போல ரங்கசாமியும் எட்டப்பன்தான்..! காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் சாடல்..!

Senthil Velan

செவ்வாய், 30 ஜனவரி 2024 (16:36 IST)
பதவி நாற்காலியை பிடித்து தூங்கி கொண்டிருப்பதால் நிதீஷ் குமாரை போல புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் எட்டப்பன்தான் என்று காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்
 
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காந்தி நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் காந்தி உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 
 
பின்னர் பேசிய வைத்திலிங்கம்,  இந்தியா கூட்டணி உடைந்துவிட்டதாக  அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுக தான் இன்றைய  தினத்தில்  சிதறி விட்டது என்றார்.  புதுச்சேரி  அதிமுக உண்மையில் பாஜகவையும், ரங்கசாமியையும் எதிர்க்கிறார்களா? அல்லது பி டீமாக செயல்படுகிறார்களா? என தெரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
கட்சி மாறுவதற்கு பெயர் போன ஊர் என எப்போதும் புதுச்சேரியை சொல்வார்கள். ஆனால் தற்போது அந்த காற்று பீகார் பக்கம் சென்றுவிட்டது என  தெரிவித்த அவர், நிதீஷ்குமார் மணிக்கு மணி, அணி மாறாக்கூடியவர் என்றும் நல்ல வேலை இப்பவே சென்றுவிட்டார் என்றும் பச்சோந்தியாக, எட்டப்பனாக உள்ளவர் நிதிஷ்குமார் என்றும் கடுமையாக சாடினார்.

ALSO READ: பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதில் தகராறு..! திமுக அதிமுக தரப்பு மோதி கொண்டதால் பரபரப்பு..!!
 
நிதிஷ்குமாருக்கு அண்ணன்தான் ரங்கசாமி என தெரிவித்த வைத்திலிங்கம், நிதிஷ்குமார் எப்படி நாற்காலியை பிடித்து தொங்குகிறாரோ, அதைவிட மோசமாக நாற்காலியை விடாமல் ரங்கசாமி  பிடித்துக்கொண்டு தொங்குகிறார் என விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்