விவசாயிகள் போராட்டம்; 500 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

புதன், 10 பிப்ரவரி 2021 (13:46 IST)
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக 500 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியால் கலவரம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் வன்மம் பரப்பும் விதமாக பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை கண்டறிந்த மத்திய அரசு அந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் அந்த கணக்குகள் குறித்து ஆராய்ந்துள்ள ட்விட்டர் நிறுவனம் முதல் கட்டமாக 500 ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்