பொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் ! பெண் சாதனை

சனி, 13 ஜூலை 2019 (20:38 IST)
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில்  சுயதொழில் செய்து சாதிக்கும் மக்களும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர்  மாநிலம் மாவோ நகரில் உள்ள சாங்சாங்  கிராமத்தில் வசித்து வரும்  சச்சியா என்ற பெண், சிறுவயது முதலே பொம்மை தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பொம்மைகளை எப்படி  செய்வது என்பது குறித்து தன் தாயாரிடம் கற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த பொம்மை உருவாக்கும் முறையை கடந்த 2002 ஆம் ஆண்டு தொழில்முறையாகக் கொண்டுள்ளார். 
 
மேலும், இந்த பொம்மை தயாரிக்க மக்காள சோளக் கழிவுகள், நார் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இவர் நாளொன்றுக்கு 10 பொம்மைகள் செய்வதாகவும்,  அதில் ஒரு பொம்பை ரூ. 500 விலை போவதால் தினமும் அவர் 5000 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்