திருப்பதியில் தீவிரமடைந்த கொரோனா! – அவசரமாக ஊரடங்கு அமல்!

புதன், 22 ஜூலை 2020 (15:01 IST)
திருப்பதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் கோவில்களை திறப்பது குறித்த முடிவுகளை மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அதன்படி திருப்பதி கோவில் திறக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 120 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தலைமை அர்ச்சகர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனால் திருப்பதியில் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு ஆகஸ்டு 5 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வழக்கமான கடைகள் மற்றும் அங்காடிகள் காலை 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் முழுவதும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கொண்டு தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து இந்த மாதம் இறுதியில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்