அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: மாநில முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (13:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது என்பது தெரிந்ததே 
 
ஏழாம் கட்ட ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது
 
பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மட்டுமே இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரையரங்குகள் விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்''
 
திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்