மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநர் ... நெகிழ்ந்த பிரதமர் மோடி !

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:05 IST)
மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநர் நெகிழ்ந்த பிரதமர் மோடி

மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்த ரிக்‌ஷா ஓட்டுநரை அழைத்து பிரதமர் மோடி நெகிழ்ந்தார்.
 
மோடியின்  பாராளுமன்றத் தொகுதி வாரணாசி. இங்கு ரிக்‌ஷா ஓட்டுநரான இருப்பவர் மங்கள் கேவத். இவர் தனது மகளின் திருமணத்தில்  பங்கேற்கும்படி மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
 
அதன்பின், பிரதமர் மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுத்த குடும்பத்தினரை சந்தித்து பேசினார். மங்கள் கேவத் கங்கை ஆற்றங்கரையை சுத்தம் செய்ய பங்கெடுத்ததற்காக அவருக்கு பிரதமர் மோடி பாராட்டுகள் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மங்கள் ராவத் கூறியதாவது, எனது மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடி வர இயலவில்லை என்றாலும்,  அவர் வாழ்த்துச் செய்து அனுப்பியது தனக்கு மகிழ்ச்சியான இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்