கல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதலாளி !

திங்கள், 22 ஜூலை 2019 (20:25 IST)
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   ஒரு பிரபல ஹோட்டல் உள்ளது. இங்கு  ஒரு மாணவி சாப்பிட வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஹோட்டல் ஓனருக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. அதனால் ஹோட்டல் ஓனர் அம்மாணவியை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் உள்ள சிங்ரா பகுதியில்   காசி பித்யாபீட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பக்கத்தில் ஒருபிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலுக்கு வந்த ஸ்வேதா என்ற மாணவி(22) , அந்த ஹோட்டலின் முதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓனர் அம்மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிகிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஓனரை போலீஸார் கைது செய்தனர். தற்போது போலிஸார் அவரிடம்  விசாரித்து வருகின்றனர். ஓனர் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்