ED காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Sinoj

புதன், 20 மார்ச் 2024 (20:02 IST)
அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சமீபகாலமாக நாடு முழுவதும் பல பகுதியில் அமலாக்கத்துறையினர் ஊழல்  புகார் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரையும் கைது செய்து வருவதாக மீடியாக்களில் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,  அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
 
90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவிட்டால் சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை அமலாக்கத்துறை தடுக்கக் கூடாது. சட்டப்பூர்வ ஜாமீன உரிமையைத் தடுக்கும்குற்றப்பத்திரிக்கையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்