அமலில் உள்ள ஊரடங்கு வெற்றியா? மன்மோகன் சிங் கருத்து!!

வியாழன், 23 ஏப்ரல் 2020 (14:33 IST)
கொரோனாவை கட்டுப்படுத்தினால் தான் ஊரடங்கு வெற்றி பெரும் என  மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 5,221 ஆக உயர்ந்துள்ள நிலையில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். 722 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
 
தொடர்ந்து டெல்லியில் 2,248 பேரும், குஜராத்தில் 2,407 பேரும், ராஜஸ்தானில் 1,888 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,574 ஆக உள்ளது. தமிழகம் 1,629 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 20,471 ஆக உள்ளது. 3,960 பேர் குணமடைந்துள்ள நிலையில் 652 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மன்மோகன் சிங் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, 
 
எந்த அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஊரடங்கின் வெற்றி அமையும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்