சுவாச பிரச்சினையால் டெல்லியிலிருந்து வெளியேறும் சோனியா காந்தி! – சென்னை வருவதாக தகவல்!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:04 IST)
டெல்லியில் உருவாகியுள்ள பெரும் காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினையை எதிர்கொண்டுள்ள சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக மார்பு தொற்று மற்றும் சுவாச பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவை தாண்டியுள்ள நிலையில் சோனியா காந்தி இதற்கு மேலும் டெல்லியில் தங்குவது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறி தற்காலிகமாக வெளிநகரம் ஒன்றில் தங்க உள்ளதாகவும், பெரும்பாலும் அவர் சென்னை அல்லது கோவாவில் தங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்