இந்தியா கூட்டணிக்கு தலைவரை நியமனம் செய்ய வேண்டும்: சிவசேனா வேண்டுகோள்

செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:56 IST)
இந்தியா கூட்டணிக்கு என ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழில் தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணிக்கு என தற்போது ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து சில முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி  ஒரு கூட்டணிக்கு தலைவராக இருப்பது போல் இந்தியா கூட்டணிக்கும் ஒரு தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும்  அவ்வாறு நியமனம் செய்தால் தான் இந்தியா கூட்டணி தனது இலக்கை அடைய முடியும் என்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு முகத்தை முன்னோக்கி கொண்டு வர வேண்டும் என்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த தலைவரை ஒருங்கிணைப்பாளர் அல்லது தலைவராக செயல்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  

இந்தியா கூட்டணியை வலுப்படுத்த ஒரு தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மற்ற தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்