ஏறிய வேகத்தில் படுவேகமாக இறங்கும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வியாழன், 28 ஜனவரி 2021 (13:20 IST)
கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது என்பதையும் குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 50 ஆயிரத்தை தாண்டியது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் ஏறிய அதே வேகத்தில் தற்போது பங்குச்சந்தை படுவேகமாக கீழே இறங்கி வருகிறது. நேற்று சென்செக்ஸ் 900க்கும் மேற்பட்ட புள்ளிகள் இறங்கிய நிலையில் இன்றும் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் இறங்கியுள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 46,803 புள்ளியில் வர்த்தம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் நிப்டி 218 புள்ளிகள் இறங்கி 13749 என்ற நிலையில் வர்த்தமாகி வருகிறது. வங்கிநிப்டி 500 புள்ளிகள் இறங்கி 29748 என வர்த்தகம் ஆகிறது.
 
இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரமே சில புத்திசாலி வர்த்தகர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்