அதீதமான கொரோனா: காஷ்மீரில் பள்ளிகளுக்கு மூடுவிழா!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:29 IST)
காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய் பரவலைக் கட்டுப்பட்டுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், புதிதாக 1,03,558  பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,89,067 ஆக உயர்ந்தது. புதிதாக 478 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 52,847 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,41,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
அந்த வகையில், காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, நோய் பரவலைக் கட்டுப்பட்டுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளை மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி 9 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்று ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
 
காஷ்மீரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்று ஆளுநர் கூறியுள்ளார். அத்துடன் 200 பேர்களுக்கு அதிகமாக கூடும் சமூக நிகழ்வுகள், கூட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்