செல்போன் விளையாட்டில் ரூ 5.40 லட்சத்தை இழந்த சிறுவன்! – பெற்றோர் அதிர்ச்சி!

செவ்வாய், 14 ஜூலை 2020 (13:53 IST)
ஆந்திராவில் செல்போனில் தீவிரமாக கேம் விளையாடிய சிறுவனால் ரூ.5.40 லட்சத்தை அந்த குடும்பம் இழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அமலாப்புரத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தனது அம்மாவின் செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவரது தந்தை குவைத்தில் பணிபுரிந்து மாதாமாதம் சம்பளத்தை மனைவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டை மாணவன் தீவிரமாக விளையாடி வந்த நிலையில் அதில் உயர்ரக துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் போன்றவற்றை வாங்க பணம் செலுத்த வேண்டும் என குறுந்தகவல் வந்துள்ளது. சிறுவன் தனது அம்மாவின் வங்கி கணக்கு எண், கடவுசொல் உள்ளிட்டவற்றை பதிவு செய்து தொடர்ந்து அந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளான். இதனால் மெல்ல மெல்ல சிறுவனின் அம்மா கணக்கிலிருந்து ரூ 5.40 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது.

இது தெரியாமல் சிறுவனின் தாய் வங்கிக்கு பணம் எடுக்க செல்ல பணம் இல்லை என தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுவன் கேம் விளையாடி பணத்தை இழந்தது தெரிய வந்ததும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகளாக சேமித்த பணம் சிறுவனின் விளையாட்டால் பறிபோனது பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்