இன்னும் கோவிலே கட்டலை அதுக்குள்ளவா? – ராமர் கோவில் நிதியில் மோசடி!

வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:07 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள பணத்தில் மோசடி நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நீண்ட காலமாக நடந்த வழக்கில் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தொடங்கப்பட்டு கோவில் கட்டுவதற்கான நிதி தொகை அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. போலி காசோலைகளை பயன்படுத்தி இரண்டு வங்கிகளில் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மோசடி செய்தவருக்கு எதிராக அயோத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறான மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்