மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை நாடு இப்போது உணர்கிறது – ராகுல்காந்தி ஆதங்கம்!

சனி, 26 செப்டம்பர் 2020 (10:33 IST)
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவரின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு உலகப்பொருளாதாரம் சிறப்பாக கையளப்பட்டதாக பொருளாதார அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதை முன்னிட்டு காங்கிரஸ் முனனாள் தலைவர் ராகுல்காந்தி ’  மன்மோகன் சிங் போன்ற ஆழமாக சிந்திக்கக் கூடிய பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது. அவரது நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நமக்கு தூண்டுதலாக அமைகின்றன. 'HappyBirthdayDrMMSingh’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்