போராட்டத்தில் தீய சக்திகள் ஊடுறுவல்! – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (12:44 IST)
டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களுக்கு சமூக விரோத சக்திகள்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதாலும், கற்களை வீசியதாலும் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மேல் போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர்.

மேலும் அனுமதியின்றி பல்கலைகழகத்துக்குள் போலீஸார் நுழைந்து மாணவர்களை தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாமியா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜாமியா மாணவர்கள் போரட்டத்தில் கலவரம் நிகழ்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் புகுந்ததாகவும், அவர்களே வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருமே குற்ற பிண்ணனியை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் போலீஸார் மாணவர்கள் யாரையும் கைது செய்யவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்