போலீஸார் - மக்களுக்கு இடையே மோதல்.. ஊரடங்கின்போது கலவரமான ஊர் !

புதன், 22 ஏப்ரல் 2020 (20:08 IST)
இந்தியாவில் 20,471  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 652 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். 3,960 பேர் குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலம் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், புஜ்ரா பகுதியில் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இங்கு,  அனுமதியின் படி கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க சோதனை செய்ய போலீஸார் ரோந்து வந்தனர்.

அப்போது, காய்கறி விற்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே தகராறு இருந்ததாகத் தெரிகிறது. அதை  தடுக்க முற்பட்ட போலீசார் மீது உள்ளூரில் வசிக்கும் மக்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

இதில், ஒரு காவலருக்கு தலையில் அடிப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்