வாடகை கேட்டு துன்புறுத்தியவரை கைது செய்த போலீஸார்!!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (22:12 IST)
கேரள மாநிலத்தில் உள்ளா இடுக்கி மாவட்ட தலைநகரான தொடுபுழாவை அடுத்துள்ள பகுதி முட்தலைக்கோட்டா. இங்கு வசிப்பவர் மாத்யூ (48) இவர் தாமஸ் என்ற ஓய்வு பெற்ற  ஒர் ஆசிரியரின் வீட்டில் மாத வாடகைக்கு 5 வருடங்களாகத் தங்கிவருகிறார்.

இந்த வீடு தகரங்களால் அமைக்கப்பட்ட கூடாரமாக இருக்கிறது. இந்நிலையில், நாடு மாநிலத்தில் கொரோனா பவரலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாத்யூ வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

மாநில அரசு வழங்கிய அரிசி கொண்டு குடும்பத்தினார் உணவு உண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மாத்யூவிடம் இம்மாத வாடகையைக் கேட்டு நச்சரித்துள்ளார் தாமஸ் . ஆனால் தனக்கு வேலைஇல்லை வேலைக்குச் சென்று தருவதாகக் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த தாமஸ் அவர்களை வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதுகுறித்து அங்குள்ள தன்னார்வலர்களுக்கு தெரியவர அவர்கள் போலீஸரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், தாமஸை போலீஸார் கைதுசெய்து, மாத்யூவுக்கு உதவிகள் செய்து கொடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்