கேரளாவிற்கு 500 கோடி நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

சனி, 18 ஆகஸ்ட் 2018 (10:46 IST)
கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவிற்கு, பிரதமர் மோடி 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. கேரளாவில் அணை நிரம்பியதால், அவை திறக்கப்பட்டு கேரளாவே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. 
 
ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 2,23,139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி கேரளா சென்றுள்ளார். பிரதமர் மோடியை கேரள மாநில கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
 
வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கேரளாவிற்கு 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என் அறிவித்துள்ளார். கேரளாவிற்கு ஏற்கனவே மத்திய அரசு 100 கோடி ரூபாயை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்