எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பதுதான் எதிர்கட்சியா? – பிரதமர் மோடி கண்டனம்!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:45 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி எதிர்கட்சிகளை காரசாரமாக விமர்சித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திற்கான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் ”விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை தாங்களே திறந்தவெளி சந்தையில் விற்கலாம் என்ற சுதந்திரத்தை தடுக்க விரும்புகிறவர்கள்தான் விவசாய மசோதாவுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் எதிர்கட்சி என்ற பெயர் இருப்பதனால் மட்டுமே எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், இடைத்தரகர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்