''நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும்''- ராகுல் காந்தி

Sinoj

வியாழன், 22 பிப்ரவரி 2024 (16:48 IST)
நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறீர்கள் என மக்களுக்குத் தெரியும் என்று மத்திய அரசை  ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்றைய போராட்டத்தின்போது, ஹரியானாவில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 24 வயது சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.
 
சுப்கரன் சிங் தலையில்  சுடப்பட்டு உயிரிழந்ததாக விவசாய சங்கத் தலைவர் குற்றம்சாட்டியிருந்தார்.
 
இந்தச் சம்பவம்  நாடு  முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறீர்கள் என மக்களுக்குத் தெரியும் என்று மத்திய அரசை  ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது.
 
முன்னாள் ஆளுனர் உண்மையைக் கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்குவது, இணைய சேவையை தடை செய்வது, சமூக வலைதளங்களில் உண்மை குரல்களை  நசுக்குவது..இதுதான் உங்களின் ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும்,  நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறீர்கள் என மக்களுக்குத் தெரியும். அவர்கள்  அதற்குப் பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்