பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில்: முதல் நாளே கட்டுக்கடங்காத கூட்டம்!

Siva

செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:35 IST)
நேற்று ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பொதுமக்களுக்கு ராமர் கோவிலில் தரிசனம் செய்ய  அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் முதல் நாளே ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
500 ஆண்டுகால இந்து மக்களின் கனவு நேற்று நனவாகியது என்பதும் நேற்று பிரதமர் மோடி குழந்தை இராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் நாளே அதிகாலை 3 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு குவிய தொடங்கிவிட்டனர்.
 
 இதனால் ராமர் கோயிலுக்குள் நுழையவும் ராமர் கோவிலில் இருந்து வெளியே வரவும் பக்தர்கள் சிரமப்பட்டு வருவதாகவும்  பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
இன்று அதிகாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்