பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தேனில் கலப்படம் – அதிர்ச்சி தகவல்!

வியாழன், 3 டிசம்பர் 2020 (09:51 IST)
பாபா ராம்தேவ்வின் நிறுவனமான பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் தேனில் சர்க்கரைப் பாகை கலப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாமியாராக வலம்வரும் பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற பெயரில் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களில் தேனும் ஒன்று. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி விற்பனை நிறுவனங்களான டாபர், பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனை ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் அவற்றின் தரத்துக்கான சோதனை நடத்தப்பட்டது.  அதில் பதஞ்சலி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் தேனில் சக்கரை பாகு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்