’சர்ஜிக்கல் கெத்து’ இந்தியாவுக்கே மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்...

திங்கள், 15 அக்டோபர் 2018 (15:44 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய காஸ்மீர் எல்லை பகுதிகாளில் பாகிஸ்தானில் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் இரண்டு ராணுவதினர் காயம் அடைந்தால் மருத்துவமனையில் சேர்க்க்ப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இனி பாகிஸ்தானில் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கடந்த 2015 ல் நடத்திய சர்ஜிக்கல் துல்லிய தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இந்திய ராணுவ தளபதி கூறியிருந்தார்.
 
இது பாகிஸ்தானுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிகையாகவே பார்க்கப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான்  ராணுவ பிரதான செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறியதாவது:
 
"இந்தியா, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது என்பது வெறும் கதைதான்.இனியும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பவேண்டாம்.
 
ஒருவேளை இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு நாங்கள் பத்து முறை தக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலைஏற்படும் இவ்வாறு அவர் கூறினார்."
 
பாகிஸ்தான் ராணிவ செய்திதொடர்பாளர் இவ்வாறு கூறியுள்ளது பெரும் இந்திய ,பாகிஸ்தான் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்