இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை… நிர்மலா சீதாராமன் தகவல்!

புதன், 14 ஏப்ரல் 2021 (08:26 IST)
இந்தியாவில் மீண்டும் பெரிய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் அத்ற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உலக வங்கி குழுமத்தின் தலைவரிடம் நிர்மலா சீதாராமன் உரையாடிய போது ’முழு ஊரடங்கை அமல்படுத்தி பொருளாதாரத்தை முடக்க தயாராக இல்லை’ என்று அவர் தெரிவித்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்