Paytm Payments Bank நிறுவனத்தின் மீது புதிய வழக்கு

Sinoj

புதன், 14 பிப்ரவரி 2024 (15:55 IST)
Paytm Payments Bank  நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த் முன்னணி டிஜிட்டர் பணப்பரிவர்த்தனை  நிறுவனம் பேடிஎம்.  குறுகிய காலத்தில்  இந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர் உள்ளனர்.
சமீப காலமாக பேடிம் பேமண்ட் வங்கியில் சிக்கல்கள் அதிகரித்து வரும்  நிலையில், ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இன்னும் சில நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் இந்திய  தேசிய கொடுப்பனவு கழகம் உடன் ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில்,அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக  Paytm Payments Bank  நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
மேலும், பேடிஎம் பேமண்ட் பேங்க் மீது விசாரணையைத் தொடங்க அமலாக்க இயக்குனரகம் (ED) புதிய வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்