மார்ச் 18 ஆம் தேதி MDS படிப்பிற்கான நீட் தேர்வு!

Sinoj

செவ்வாய், 30 ஜனவரி 2024 (21:04 IST)
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு அடுத்தபடி பெரும்பாலான மாணவர்களில் தேர்வாக இருப்பது பி.டி.எஸ்(BDS)எனப்படும் இளநிலை பல் மருத்துவ படிப்பு ஆகும்.

இந்த படிப்படில் சேர  12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், மற்றும்  உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன்  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிடிஎஸ் படிப்பில் சேர தகுதியுடையவர் ஆவர்.

இந்த நிலையில், பிடிஎஸ் படிப்பு முடித்து, எம்டிஎஸ்(MDS) படிப்புக்கான நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதில், முது நிலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் எனவும், இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19 ஆம் தேதி பகல் 11.55 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் எனவும், மேலும் தகவல்களுக்கு natboard.edu.in என்ற இணையதளத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்