நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு அனுமதி! – நீதிமன்றம் உத்தரவு!

ஞாயிறு, 29 நவம்பர் 2020 (14:37 IST)
நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகலாந்தில் பல இடங்களில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்த நிலையில் நாகலாந்து அரசு நாய் இறைச்சிக்கு தடை விதித்தது.

அரசின் இந்த தடைக்கு எதிராக நாய் இறைச்சி விற்பனையாளர்கள் நாகலாந்து நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் தேவையான ஆவணங்களை ஒப்படைக்க நாகலாந்து அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ஆவணங்கள் வழங்கப்படாததால் அரசின் தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனால் தற்போது நாகலாந்தில் நாய் இறைச்சி விற்பனை மற்றும் இறக்குமதி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்