இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.46 லட்சமாக உயர்வு

ஞாயிறு, 7 ஜூன் 2020 (09:46 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகளவில் அதிகரித்து வருவதால் உலக அளவில் இந்தியா தற்போது 6வது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 2,36,657ஆக இருந்த நிலையில் இன்று 2,46,628 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642 லிருந்து 6,929 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073 லிருந்து 1,19,293 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அதே இந்தியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 7,000ஐ நெருங்குகிறது என்பதும் கவலையை தரும் வகையில் உள்ளது
 
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் கொரோனா தொற்றால் பலியான நிலையில், 5,220 பேர் குணமடைந்தனர் என்பதும், 1,20,406 பேர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்