பெட்ரோலில் எத்தனால் கலப்பு… மோடி விளக்கம்!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:30 IST)
பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்வது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

பெட்ரோல் விலை தினசரி உயர்ந்து 100 ரூபாயை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பெட்ரோலில் 10% கலந்து வ் விநியோகிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் மட்டுமே கலக்கப்படுகிறது.

மக்கள் தங்களது வாகனத்தை கழுவும்போது, அல்லது மழைபெய்யும்போது, பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது ஜர்க் ஆக நேரிடு எனவும் பெட்ரோல் டேங்கில் சேர்ந்துள்ள தண்ணீரிற்கு வாடிக்கையாளர்க்ளே பொறுப்பு ஏற்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது குறித்து நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள மோடி ‘2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா தன்னுடைய எண்ணெய்த் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. நான் ஏன் இறக்குமதியை அதிகளவில் சார்ந்திருக்கிறோம்? நான் யாரையும் விமர்சிக்கவில்லை. முந்தைய அரசு இதுகுறித்து கவனம் செலுத்தி இருந்தால் நம் நாட்டின் நடுத்தர மக்கள் கஷ்டப்பட நேர்ந்திருக்காது. நம் அரசு மக்கள் குறித்து யோசிக்கிறது. அதனால்தான் பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.’ எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்