பாத்தியா..! அண்ணன் இப்பவே ஆரம்பிச்சிட்டாரு! – சரக்கு கிடைத்த களிப்பில் மதுவிரும்பிகள் #WebViral

திங்கள், 4 மே 2020 (14:38 IST)
ஊரடங்கு தளர்வுகளால் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது விரும்பிகளின் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட்டு வருகிறது. இன்று கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலையிலிருந்தே மதுக்கடைகள் முன்பு மது விரும்பிகள் கூட்டமாக கூட தொடங்கிவிட்டனர்.

பல இடங்களில் சமூக இடைவெளியோடு கிலோமீட்டர் தூரத்திற்கு பலர் நின்று கொண்டிருக்கும் அதே சமயம் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டு கடைகள் முன்பு கூட்டமும் குவிந்து வருகிறது. தற்போது கர்நாடகாவின் பச்சை மண்டல பகுதிகளில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது கிடைத்த மகிழ்ச்சியில் மது விரும்பிகள் உற்சாக நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதேசமயம், இதுபோன்ற செயல்களால் சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

*Green zone People after successfully buying daaru*#LiquorShops pic.twitter.com/t4njAW4PFY

— Tweetera

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்