கோட்சே பயங்கரவாதி இல்லை....தேசபக்தர் - பாஜக எம்பி.சர்ச்சை பேச்சு

புதன், 13 ஜனவரி 2021 (22:06 IST)
பாஜக  எம்பி. பிரக்யா தாகூர் ஏற்கனவே தனது சர்ச்சைக் கருத்துகளுக்காக அறியப்பட்டவர். இந்நிலையில்,  அவர் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே பயங்கரவாதி அல்ல தேச பக்தர் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாடாளுமன்ற  உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான திக் விஜய் சிங், கோட்சே நூலகம் தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் பயங்கரவாதி கோட்சே என்றூ கூறினார்.

இதுகுறித்துப் பேசிய பாஜக எம்பி. பிரக்யா தாகூர் கோட்சேயை பயங்கரவாதி என்று கூறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேசப்பக்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

எம்பி.பிரக்யா ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் கோட்சேயை தேச பக்தர் என்றுகூறியது சர்ச்சையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்