டெல்லி முதல்வர் ஆகிறாரா கெஜ்ரிவால் மனைவி? ஆம் ஆத்மி தீவிர ஆலோசனை..!

Siva

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (08:28 IST)
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறை கஸ்டடியில் இருக்கும் நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏப்ரல் 15 வரை அவரது காவல் நீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லி முதல்வர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா என்பவர் கூறிய போது அரவிந்த் கெஜ்ர்வால் எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரே முதல்வராக இருப்பார் என்றும் அரசியல் அமைப்பு உரிமை மற்றும் கடமையின்படி அவர் செயல்படுவார் என்றும் டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் உறுதிமொழி எடுத்துள்ளதை கடைசி வரை கட்டி காப்பார் என்றும் எனவே அவர் தான் முதல்வராக நீடிப்பார் என்று கூறினார்

ஆனால் கெஜ்ரிவால் மனைவி சுமிதா ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்க போவதாக டெல்லி வட்டாரங்கள் கூறிய நிலையில் அவர் டெல்லி முதல்வராகவும் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் ஒரு முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீடிக்கப்பட்டால் சுனிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்