டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு... ’பேபி மப்ளர் மேனுக்கு’ உற்சாக வரவேற்பு !

ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (13:20 IST)
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு... ’பேபி மப்ளர் மேனுக்கு’ உற்சாக வரவேற்பு
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வென்றது. 
 
எனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுள்ளார்.
 
கடந்த சில ஆண்டுகளாக ஒரு தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வராக பதவியேற்கும் போது அண்டை மாநில முதல்வர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழா நிகழ்வில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே இந்த பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
அதன்பிறகு டெல்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், முக்கியமாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு மஃப்ளர், சுவட்டர், கண்ணாடி சகிதமாக அனைத்து ஊடகங்களையும் கவர்ந்த பேபி  மப்ளர் மேனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவிவேற்புவிழாவில் கலந்து கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்