8 முறை ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்..! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Senthil Velan

வியாழன், 7 மார்ச் 2024 (13:29 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த நிலையில், வரும் 16 ஆம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்று இருப்பது விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். 
 
இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை சம்மனுக்கு இதுவரை ஒருமுறை கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
 
இந்நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

ALSO READ: மதிமுகவுக்கு 1 மக்களவை, 1 மாநிலங்களவை சீட்.? திமுக ஒப்புதல் என தகவல்..!!

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வரும் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்  என்று கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்