ராஜினாமா செய்து அரசியலில் இறங்கும் நீதிபதி!

Sinoj

திங்கள், 4 மார்ச் 2024 (17:06 IST)
பாஜகவில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து வந்த நிலையில், கொல்கத்தா நீதிமன்ற  நீதிபதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  கடந்த சனிக்கிழமை பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் 34 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கீதா கோடா, தமிழக எம்.எல்.ஏ  விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 
 
இப்படி சில நாட்களாக பாஜகவில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து வந்த நிலையில், கொல்கத்தா நீதிமன்ற  நீதிபதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
கொல்கத்தா உயர் நீதிமன்ற    நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், பதவியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.  இதற்காக தனது ராஜினாமா கடிதத்தை  நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தலைமை நீதிபதிக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.   தலைமை நீதிபதிக்கு அனுப்பி பிறகு எந்தக் கட்சியில் இணைவது பற்றி அவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில  நாட்களே  உள்ள நிலையில்,  பாஜகவில் இணைந்து, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் கிரிக்கெட் வீரரும் டில்லி கிழக்கு தொகுதி எம்பியுமான கவுதம் காம்பீர்  அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்க பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்தார்.
 
அதேபோல் ஜார்கண்ட் மாநில மக்களவை எம்பி ஜயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகி, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்