வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது இன்சாட் செயற்கைக்கோள்! இஸ்ரோ தகவல்..!

Siva

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:52 IST)
சமீபத்தில் இஸ்ரோ செலுத்திய இன்சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது
 
வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் கடந்த 17ஆம் தேதி GSLV F14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

பிப்ரவரி 17ஆம் தேதி GSLV F14 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் பூமியை சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இஸ்ரோ வடிவமைத்த GSLV-F14 என்ற ராக்கெட் பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்த ராக்கெட்டில் வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள்  இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படுவது இந்திய விஞ்ஞானிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

Edited by Siva

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்