இந்தியாவில் முதல் AI ரோபோ டீச்சர் IRIS அறிமுகம்! எங்கு தெரியுமா?

Sinoj

புதன், 6 மார்ச் 2024 (18:33 IST)
இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய  உலகில் அனைத்து சினிமா, ஊடகம், அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற   செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்குள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் Markerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கேட்கப்படும் சிக்கலான கேள்விகளுக்கு  பதிலளிக்கவும்,  Voice Assistance மற்றும்  Interactive கற்றல் அனுபவங்களையும் IRIS வழங்கும் என கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்