ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:00 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 4,203 ஆக உயர்ந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். 507 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் 2003 பேரும், குஜராத்தில் 1,851 பேரும், ராஜஸ்தானில் 1,478 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் 1,477 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,485 ஆக உள்ளதால் அது நான்காவத் இடத்திற்கு சென்றுள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 17,656 ஆக உள்ளது. 2,842 பேர் குணமடைந்துள்ள நிலையில் 559 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்